முதலாம் தியோனீசியசு (
அண். கி.மு. 432–367 ) என்பவர்
பண்டைய கிரேக்க சர்வாதிகாரி ஆவார். இவர் சிசிலியில் உள்ள
சிரக்கூசாவின் ஆட்சியாளராக இருந்தார். மேற்குக் கிரேக்கக் குடியேற்றங்களில் சிரக்கூசா நகர அரசை மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாகச் சிசிலியிலிருந்து இத்தாலி வரை பரவிய பேரரசாக மாற்றினார். இந்தப் பேரரசு பெயரளவில் ஓர் அரசியலமைப்புள்ள குடியரசாக இருந்தாலும், உண்மையில் இது முடியாட்சியாக இருந்த முதல் கிரேக்கப் பேரரசாகும். இதில் தியோனீசியஸ்
பேரரசர் அலெக்சாந்தருக்கும் அகஸ்டசின் சாதனைகளுக்கும் முன்மாதிரியாக இருந்தார். இவர் தனது வாழ்நாளில் தெய்வீக மரியாதைகளைப் பெற்ற முதல் கிரேக்க ஆட்சியாளர்களில் ஒருவராக இருந்து பிற்கால ஆட்சியாளர்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணமாக இருந்தார். இவர் மிக மோசமான, கொடூரமான, பழிவாங்கும் சர்வாதிகாரிகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாகப் பழங்காலத்தில் கருதப்பட்டார்.
மேலும்...
மேலும் கட்டுரைகள்...